திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (09:37 IST)

One last dance… தளபதி 69 பாடலில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல்  காட்சியை படமாக்கி வருகிறார் இயக்குனர் வினோத்.

இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யின் கடைசி படம் என்பதால் “one last dance” என்ற வார்த்தை பாடலில் இடம்பெறும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம்.