1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (14:56 IST)

மோடியுடன் டைரெக்ட் டீலிங்; ஈபிஎஸ் - ஓபிஎஸ்-னு அலஞ்ச தேமுதிக அப்செட்!!

ராஜ்யசபா சீட் வேண்டி தேமுதிக சுதீஷ் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வததை சந்தித்து பேசியது எல்லாம் வீணாய்போய்யுள்ளது. 
 
வரும் மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் ராஜ்யசபா தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3 எம்பி பதவி திமுகவுக்கும் 3 எம்பி பதவி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் யாருக்கும் எம்பி பதவி அளிக்காமல் திமுக வேட்பாளர்களையே மூவரையும் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி ஜி.கே.வாசன் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என தேமுதிமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தேமுதிகவுக்கு சீட் கொடுக்காமல் ராஜ்யசபா எம்பி பதவியை கேட்காத ஜிகே வாசனை அதிமுக தலைமை தேர்வு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
ராஜ்யசபா சீட் வேண்டி தேமுதிக சுதீஷ் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வததை சந்தித்து பேசியது எல்லாம் வீணாய்போய்யுள்ளது. ஆனால், ஜி.கே.வாசனோ ஒரே முறை மோடிக்கு விசிட் அடித்து சுலபமாக இந்த சீட்டை பெற்றுவிடார் என கூறப்படுகிறது. 
 
ஜி.கே.வாசன் மந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாய் இருப்பார் என கருதி எம்பி சீட் வழங்கப்பட்டிருக்க கூடும் என தெரிகிறது.