செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 9 மார்ச் 2020 (13:52 IST)

யெஸ் வங்கியோடு யாருக்கு கூட்டு? : மோதிக்கொண்ட பாஜக – காங்கிரஸ்!

நிதிநெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில் பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் எழுந்துள்ளது.

இந்தியாவில் உள்ள தனியார் வங்கியான யெஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்த வங்கியின் இயக்குனர் குழுவை முடக்கி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது

மேலும் யெஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரியங்கா காந்தியிடம் இருந்து ராணா கபூர் விலை உயர்ந்த ஓவியம் ஒன்றை வாங்கியதாக பாஜக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மளாவிய தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ஊழல் செய்யும் தொழிலதிபர்களுடன் எப்போதுமே சோனியா காந்திக்கு தொடர்பு இருந்து வருவதாகவும் குறிப்பிட்டு, நீரவ் மோடி, விஜய் மல்லையாவுடனான சோனியா காந்தி குடும்பத்தின் தொடர்பு என பதிவிட்டிருந்தார்.

இதை பாஜகவினர் பலரும் தங்களது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், பிரதமர் மோடி பதவியேற்ற இரண்டு முறையுமே வங்கி கடன்கள் அதிகரித்துள்ளதையும், முக்கியமாக பணமதிப்பீடு இழப்பின்போது வங்கி கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரியங்கா காந்தி விற்ற அந்த ஓவியத்திற்கு வாங்கப்பட்ட பணம் வருமானவரியில் காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யெஸ் வங்கி விவகாரத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.