1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (12:40 IST)

ராஜ்யசபா வேட்பாளர் யார்? லிஸ்ட் வெளியிட்டு டிவிஸ்ட் அடித்த தலைமை!!

அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
வரும் மார்ச் 26 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் ராஜ்யசபா தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3 எம்பி பதவி திமுகவுக்கும் 3 எம்பி பதவி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் யாருக்கும் எம்பி பதவி அளிக்காமல் திமுக வேட்பாளர்களையே மூவரையும் தேர்வு செய்தார். 
 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி ஜி.கே.வாசன் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.