திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (07:43 IST)

பெற்றோர் அரவணைப்பு இல்லாத சிறுமி – 56 வயது நபர் பாலியல் தொல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு 56 வயது நபர் ஒருவரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த 10 வயது சிறுமி. அவரின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வருவதால் பெரும்பாலான நேரம் சிறுமி தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுவும் இப்போது கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் சிறுமி பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அதை கவனித்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான விஜயகுமார் என்கிற 56 வயது நபர், சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சிறுமி பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியான அவர்கள் மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.