திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (10:04 IST)

உன் வயசு என்ன? அந்த பொண்ணு வயசு என்ன? – சிறுமிகளை குறிவைக்கும் வயதான ஆசாமிகள்!

பாகிஸ்தானில் சிறுமிகளை வயதான நபர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும், மதம் மாற்றுவதுமான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் 17 வயது பூர்த்தியாக சிறுமிகளை வயதான நபர்கள் கட்டாய திருமணம் செய்வது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிறுமியை 45 வயது நபர் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்தததையும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அந்த சிறுமியை இஸ்லாத்திற்கு மதம் மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் வயதை 12 என்பதை மறைத்து 17 என ஆவணங்கள் தயாரித்ததும் தெரிய வந்துள்ளது. சிறுமியை கடத்திய 6 பேர் பிடிப்பட்ட நிலையில் தப்பியோடிய திருமணம் செய்த ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.