புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (17:05 IST)

’திகில் தச்சங்குறிச்சி’ காட்டுக்குள் அரங்கேறும் அடுத்தடுத்து கொலைகள்...

திருச்சி வனப்பகுதியில் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
திருச்சி சிறுகனூர் அருகே சுமார்  930 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது தச்சங்குறிச்சி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று எரிந்துகொண்டிருந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற் போலீஸார் கார் மட்டுமின்றி அதனுள் ஒரு உடல் எரிந்து கிடப்பதையும் கண்டுள்ளனர். பின்னர் எரிந்த நிலையில் இருந்தது ஒரு பெண் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை தவிர்த்து வேறு எந்த தகவலுமும் போலீஸுக்கு கிடைக்காத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
ஆனால், அப்பகுதி மக்கள் மட்டும் இந்த சம்பவத்தால் அச்சத்தில் உள்ளனர். காரணம், இது அந்த பகுதியில் நடக்கும் 4வது கொலையாம். இதற்கு முன்னர் நடந்த 3 கொலைகளில் ஒரு கொலைக்கான கொலையாளி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனராம்.