1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (19:47 IST)

தமிழருவிமணியன் தலைமையில் காந்தியமக்கள் இயக்கத்தினர் திடீர் ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் தமிழருவிமணியன் என்பது தெரிந்ததே
 
மேலும் தனது இயக்கமான காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி ஆரம்பிக்கும் கட்சியுடன் இணைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதை உறுதிபடக் கூறிவிட நிலையில் இன்று கோவையில் தமிழருவி மணியன் தலைமையில் காந்திய மக்கள் இயக்கத்தின் ஆலோசனை நடைபெற்றது
 
கோவை கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழருவி மணியன் தலைமையில் அதன் நிர்வாகிகள் முக்கிய முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்று ரஜினி மக்கள் மன்றத்தில் காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இரு அமைப்புகளும் ஒன்று சேரும் என்று கூறப்படுகிறது
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு திரும்ப வேண்டும் என இன்று அவர் ரசிகர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது