செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2021 (17:31 IST)

எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்த ரஜினி ரசிகர்: ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ரஜினி ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நன்றி டுவீட் தற்போது வைரலாகி வருகிறது 
 
சமீபத்தில் பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைத்து அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 2500 மற்றும் பொங்கல் செய்ய தேவையான பொருட்களை வழங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசு கொடுத்த இந்த 2500 ரூபாய் சென்னை செல்வதற்காக பயன்படுத்தப் போகிறேன் என்று ரஜினி ரசிகர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவை எடுத்ததை அடுத்து ஜனவரி 10ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அவரது ரசிகர்கள் நடத்த உள்ளனர் 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக அரசு கொடுத்த 2500 ரூபாயை செலவு செய்து சென்னை செல்லவிருக்கிறேன் என்றும் இதற்காக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ரஜினி ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்த டுவீட் பெரிய அளவில் வைரலாகி வருகிறது