செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (10:08 IST)

ஒரு வழியாக சந்திரமுகி பொம்மி பாப்பாவைக் கண்டுபிடித்த நெட்டிசன்கள்!

சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தரா, ஜோதிகா, வடிவேலு மற்றும் பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற அத்திந்தோம் என்ற பாடலில் ரஜினிகாந்தோடு நடனமாடியவர் மாஸ்டர் பிரகார்ஷினி. அவரை எல்லோரும் சந்திரமுகி பொம்மி பாப்பா என்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா முரளி தான் சந்திரமுகி பொம்மி பாப்பா என்று சமூகவலைதளங்களில் சில மாதங்களுக்கு ஒரு பொய்யான தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இப்போது அந்த பிரகார்ஷினியின் உண்மையான புகைப்படம் வெளியாகியுள்ளது. சந்திரமுகி படத்துக்கு பின் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.