1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (18:01 IST)

கரையை நெருங்கும் கஜா புயல்...

இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநில அவசரக்கட்டுப்பாடு மையத்திற்கு சென்னை வானிலை மையம் இந்த புயல் குறித்து முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்திருந்தது.
 
கடலூர் - பாம்பன் இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.
சென்னைக்கு அருகே 290 கிமீ ..,நாளைக்கு அருகே 290 கிமீல் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
 
சின்னக்குப்பம்,பெரிய குப்பம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. திருவள்ளூரில் கஜா புயல் எதிரொலியாக எண்ணூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் எதிரொலியாக புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
தற்பொழுது கஜா புயலின் வேகமானது 25 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 
கஜா புயலின் எதிரொலியாக காரைக்கால் பகுதிகளில் 2 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல்  திசைமாறிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிவரையில் கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.அதனடிப்படையில் கடலூர் மாவட்டங்களில் 8 ஆம் நிலை எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயலின் வேகமானது 25 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.