1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (14:17 IST)

புயலின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? யூடூப் சேனல் தொடக்கம்

கடலூர் - பாம்பன் இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 290 கிமீ ..,நாளைக்கு அருகே 290 கிமீல் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் புயலின்போது மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  விதமாக தேசிய பேரிடர் மேலாண்மை மூலம் இந்த யூ டுயூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் வெள்ளத்தின் போது மக்கள் என்ன பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது கார்ட்டூன் கதாபாத்திரத்தில் ஒரு மாணவி தன் பெற்றோருக்கும் தன் ஊரில் உள்ள மக்களுக்கும் வதந்திகளை நம்பாமல் புத்திசாலித்தனமாக  அறிவுரை கூறுவது போல இதில் உள்ளது.
 
மேலும் மழைக்காலத்திலும், இடி மின்னலின் போது, பலத்த புயல் காற்று வீசும் போது எவ்விதம் சமயோஜிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று  அழகாக இதில் சொல்லப்பட்டுள்ளது.
 
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசு தரப்பில், மிக பயனுள்ள ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நோக்கில் இது அமைந்துள்ளது தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையை காட்டுவதாக உள்ளது.