வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (14:24 IST)

ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் 3ஆம் நாளாக வருமான வரித்துறையினர் சோதனை..!

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் உள்ள அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருகிறது. 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்திற்கு சொந்தமானது என்ற கூறப்படும்  ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் திடீரென நேற்றும், நேற்று முன்தினமும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர் 
 
இந்த சோதனை இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாகவும் ஆழ்வார்பேட்டை ஆன்ஸ்டின் நகரில் உள்ள அலுவலகத்தில் தற்போது 10 அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்றுடன் சோதனை முடிவடைமா அல்லது நாளை நான்காவது நாளாகவும் சோதனை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva