வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (10:12 IST)

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா?

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனம் என்று கூறப்படும்  ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்
 
தமிழகத்தில் உள்ள 50 இடங்களிலும் கர்நாடகா ஆந்திரா ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும்  ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த திமுக எம்எல்ஏ மோகன் அவர்களின் மகன் கார்த்தி அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று முதல் நாள் சோதனை முடிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் நிறுவனத்தில் சோதனை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சோதனையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக செய்திகள் வெளியான நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva