செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (10:07 IST)

கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்தால் கூட்டணி தொடரும் – ஜி கே வாசன் கருத்து!

அதிமுக கூட்டணியில் இருக்கும் த மா க கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கூட்டணியில் தொடர்வது குறித்து பதிலளித்துள்ளார்.

தந்தை மூப்பனாருக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸை நடத்தி வருகிறார் ஜி கே வாசன். தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி அமைத்து தன்க்கென ஒரு சீட்டை வாங்கிவிடும் அளவுக்கு மட்டுமே அந்த கட்சியின் நிலை உள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் இப்போது இருக்கும் அதிமுக கூட்டணியிலேயே இடம்பெறுவாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பதிலளித்துள்ள ஜி கே வாசன் ‘கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால் தொடர்வோம்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு எழுந்துள்ளது.