ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (07:21 IST)

உலகம் முழுவதும் இரண்டாவது அலை: கொரோனாவில் இருந்து மீண்ட நாடுகளும் பாதிப்பு!

கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நாடுகளான  ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜெண்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உலக நாடுகள் ஜாக்கிரதையாக கொரோனாவை கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
 
இன்று காலை நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றால் 3,77,35,685 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,81,246 பேர் மரணம் என்பதும், உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,83,42,310 பேர் மீண்டுள்ளனர் என்பதும் உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 83,12,129 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,991,998 ஆக உயர்வு என்பதும், கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 219,695 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 5,128,162 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,119,300 ஆக உயர்வு என்பதும், கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 109,184 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 6,146,427பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,094,979 ஆக உயர்வு என்பதும், கொரோனாவால் பிரேசிலில் இதுவரை 109,184பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 6,146,427பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது