செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (12:58 IST)

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? அரிசி பருப்பு வாங்க குவியும் பொதுமக்கள்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாகி வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த முறை சென்னையில் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருவதால் அரிசி பருப்புகளை வாங்கி தற்போது பொதுமக்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
ஆனால் இந்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சென்னையில் முழு ஊரடங்கு என்பது சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்றும் அரசுத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கின் முடிவின் அடிப்படையில் சென்னையில் முழு ஊரடங்க்கு ஏற்படுமா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு என்றால் நகரம் தாங்காது என்றும் சமூக இடைவெளியை அறிவுறுத்தி ஊரடங்கு இல்லாமலேயே நிலைமையை கவனிப்பதே மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.