தொடர்புடைய செய்திகள்
- அதிகாலையில் சென்னையில் மழை: கோடை வெப்பத்தில் இருந்து தப்பித்த பொதுமக்கள்
- சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்!
- தமிழகத்தில் இன்று 1927 பேர்களுக்கு பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?
- தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. . வானிலை ஆய்வு மையம் தகவல்
- கொரோனா கோட்டைகளான பேட்டைகள்: எகிறும் பாதிப்பு!
1,000, 2,000, 3,000... இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ??
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
நேற்று தமிழகத்தில் 1,927 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000ஐ நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,927 பேர்களில் 1,390 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,973 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,405, தேனாம்பேட்டையில் 3,069, கோடம்பாக்கத்தில் 2,805, திரு.வி.க நகரில் 2,456, அண்ணாநகர் 2,362, அடையாறில் 1,481, வளசரவாக்கத்தில் 1,170 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
அடுத்த கட்டுரையில்
