1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will people in TN face more cold

தமிழகத்தில் கடும் குளிர் நிலவுமா?

தமிழகம்
கடும் குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எதுவும் தெரிவிக்கவில்லை என விளக்கம். 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் கடும் குளிர் நிலவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அது தவறான தகவல், கடும் குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எதுவும் தெரிவிக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை வானிலை இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash