தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 3965, சென்னையில் 1185: பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் பதட்டம்
- விவாகரத்து செய்த மனைவிக்கே மீண்டும் கட்டிவைத்த மைத்துனர்கள் – வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!
- அடிச்சு வெளுக்க போகுது மழை: இனி ஜில் ஜில் க்லைமேட் தான்!!
- சிபிஎஸ்இ போல தமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா?
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3680, டிஸ்சார்ஜ் 4163: மீண்டு வருகிறதா தமிழகம்?
ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கும் என்ற தகவல் இதுவரை தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை
இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 15ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை அடுத்து ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளிக்கு எப்படி வருவது என்று ஆசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த கல்வியாண்டில் எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை என்பதால் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் புத்தகங்களை வைத்து தொலைகாட்சியில் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பாடப்புத்தகங்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
