1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (12:28 IST)

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நாளை முதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுக்கு இணங்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். 
 
இந்த அறிவிப்புக்கு இணங்க 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து மூடுவதற்கான அரசாணையை ஏப்ரல் இருபதாம் தேதி வெளியிட்டது. 
 
இதன் படி 500 கடைகளை கண்டறிந்து உள்ள நிலையில் ஜூன் 22ஆம் தேதி முதல் அந்த கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 500 மதுபான சில்லறை கடைகள் ஜூன் 22 முதல் செயல்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva