1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ministers department change, govt order soon

இலாகா மாற்ற பரிந்துரையை திருப்பி அனுப்பிய ஆளுனர்.. அரசாணை வெளியிட தமிழக அரசு திட்டம்?

TN assembly
செந்தில் பாலாஜியின் இலாகாவை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய முதலமைச்சர் பரிந்துரையை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அரசாணை மூலம் இலாக மாற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது இரண்டு இலாக்காக்களை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு மாற்ற தமிழக முதலமைச்சர் முடிவு செய்தார். 
 
இதற்கான பரிந்துரையை அவர் கவர்னர் ரவிக்கு அனுப்பிய நிலையில் கவர்னர் அந்த பரிந்துரையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி  அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஈபிஎஸ் அறிவிப்பு