வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (12:21 IST)

வயசானாலும் ஸ்டைல் குறையாத தாத்தா! – ட்ரெண்டான பொங்கல் வீடியோ!

பொங்கலுக்கு கரும்பை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதற்கே சிரமப்பட்டு போகும் நிலையில் தாத்தா ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பலரும் முதியவர்களை ஏதும் செய்ய இயலாதவர்களாக கருதினாலும், அவர்களுக்குள் ஒரு தனித்திறன், ஆற்றல் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாடு முழுவதும் பொங்கல் விழா களைக்கட்டியிருக்கும் சூழலில் பொங்கலுக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஆட்டோ, பைக்குகளில் கட்டி வீட்டிற்கு கொண்டு சேர்ப்பதற்குள் சாமானியர்கள் சக்கையாகி விடுகின்றனர்.

ஆனால் வயதான தாத்தா ஒருவர் பொங்கல் பொருட்கள் மற்றும் கரும்பை வாங்கி கொண்டு எந்த சிரமமும் இல்லாமல் சாதரண மிதிவண்டியில் அதை கொண்டு செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. தலை மேல் கரும்பு கட்டை சுமந்து கொண்டு அந்த தாத்தா வேகமாக சைக்கிளை மிதித்து செல்கிறார். ஆனால் கரும்பு கட்டு நழுவாமல் இருக்கிறது. இந்த வீடியோ பொங்கல் அன்றிலிருந்தே இணையத்தில் பரவலாக ஷேர் ஆகி வருகிறது.