செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (12:23 IST)

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பெண் பலி !

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம் மற்றும் வாடிவாசல் போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
அதேபோன்று திருச்சி சூரியூரிலும், மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தற்போது நடௌபெற்று வருகிறது.
 
இந்நிலையில், திருச்சி சூரியூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்தப் போட்டியை காண மக்கள் திரண்டிருந்தனர்.
 
அப்போது, நிகழ்ச்சியை காண வந்திருந்த ஜோதிலெட்சும் என்ற பெண்ணை மாடு முட்டியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.