ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (15:54 IST)

நாளை காணும் பொங்கல்: மெரினாவில் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!

நாளை காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவின் கடைசி நாளில் காணும் பொங்கல் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பலர் கோவில்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என பல இடங்களுக்கும் செல்வது வழக்கம் என்பதால் வழக்கமான நாட்களை விட கூட்டமும் அதிகமாக இருக்கும்.

நாளை காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கடைக்கு ஏகப்பட்ட மக்கள் கூட்டமாக வருவார்கள் என்பதால் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் கடற்கரையின் உட்பகுதிகளிலும், சாலைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் நாளை கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் குதிரைப்படை மற்றும் கடலோர காவல்படையினர் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளின் கையில் டேக் கட்டுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதுதவிர கோவளம், மகாபலிபுரம், பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.