1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today seven days rain in tamil nadu

இன்று முதல் 7 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை
தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.  
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
உலகின் மிகச்சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு.. குடிமகன்களுக்கான முக்கிய தகவல்..!