வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு!

40 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது
 
இதன்படி இன்று முதல் தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன 
 
இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மாணவ மாணவிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.