தொடர்புடைய செய்திகள்
- இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- நாளை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
- ஆரம்பித்தது கோடை காலம்.. இயல்பை விட அதிக வெப்பம் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! நீலகிரியில் உறைபனி எச்சரிக்கை.!!
- நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு.! 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்..!!
இன்று முதல் 7 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!
இன்று முதல் 7 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழைக்காலம் மற்றும் குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கோடையின் ஆரம்பமே உக்கிரமாக இருக்கிறது என்பதும் மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மழைக்காலம் மற்றும் குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கோடையின் ஆரம்பமே உக்கிரமாக இருக்கிறது என்பதும் மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வெப்பநிலையும் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
