திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (07:47 IST)

2 ஆண்டுகளுக்கு பின் மழலையர், நர்சரி பள்ளிகள் இன்று திறப்பு: குழந்தைகள் உற்சாகம்

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் பூட்டி இருந்த நிலையில் இன்று முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பாடங்கள் தொடங்க நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டன
 
இந்த நிலையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுவதாகவும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி இன்று முதல் திறக்கப்படுவதால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது