செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:20 IST)

நாளைய தேர்வின் வினாத்தாளும் கசிந்தது..! – அதிர்ச்சியில் பள்ளிகள்!

12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.

தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மீண்டும் வணிக கணிதம் பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 12ம் வகுப்பு நடைபெற உள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாளும் தற்போது லீக் ஆனதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வினாத்தாள்கள் லீக் ஆகி வரும் சம்பவம் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.