1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today heavy rain chances in tamil nadu

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 3 நாட்கள் அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’  விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இன்று முதல் மே 21ஆம் தேதி வரை கனமழை முதல் அதி கனமழை பெய்ய உள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக  
தமிழகத்தில் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல்   அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி  மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு என்றும், தூத்துக்குடி, ராமநாதபரம், மதுரை, சிவகங்கை, புதக்கோட்டை மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும் இயல்பான வெப்பம் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?