1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai meteorological says about rain today

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

rain red umbrella
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கமே தெரியாத அளவில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பதும் நீர் நிலைகளிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டமும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நேற்று மாலை 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த ஆண்டு கோடையின் தாக்கமே தெரியாத அளவுக்கு டிசம்பர் மாதம் போல் பல இடங்களில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!