1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 மே 2024 (15:27 IST)

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தில் இன்று மாலை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலமாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் சில இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் மே 18 முதல் 20 வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று மாலை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 31 மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran