1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today five days rain in tamil nadu

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Rain
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது நவம்பர் 24ஆம் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது நவம்பர் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் நிலையில் மேலும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி: சாப்ட்வேர் இன்ஜினியர் மாரடைப்பில் மரணம்