1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (11:00 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் திடீர் திருப்பம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம்  செய்யப்பட்ட வழக்கில் இன்று முதல் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது. அவரும் இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நிலையில் இன்றுமுதல் அவர் இந்த வழக்கின் விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
 
இந்த நிலையில் இன்று முதல் ஐந்து நாட்கள் மட்டுமே இந்த வழக்கை அவர் தொடர்ந்து விசாரணை செய்வார் என்றும், ஐந்து நாட்கள் விசாரணையை முடித்தவுடன் அவர் இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பை வழங்குவார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
எனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரமே வெளிவர வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த திடீர் திருப்பத்தால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.