திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஜூலை 2018 (16:11 IST)

எல்லா நடிகைகளும் இப்படிதான் முன்னேறினார்களா? ஸ்ரீரெட்டி போட்டது தப்பு கணக்கு: கஸ்தூரி

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை அதிர வைத்திருக்கும் ஸ்ரீரெட்டி, சான்ஸ் கிடைந்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

 
திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை குறிப்பிட்டு குற்றம்சாட்டி தெலுங்கு திரையுலகை அதிரவைத்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகையும் அதிரவைத்துள்ளார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
ஸ்ரீ ரெட்டி செய்த மிக பெரிய தவறு என்ன என்று அவர் இன்று வரை உணர்ந்தாரா தெரியவில்லை. அவர் சினிமாவில் உள்ள ஆண்களை தவறாக எடைபோட்டு ஏமாந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அவர்,தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான் . எல்லா நடிகைகளும் படுத்துதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். 
 
படுத்தால் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிக பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னை போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு என்று தெரிவித்துள்ளார்.