ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (18:36 IST)

TVK Maanadu: போட்டோ, வீடியோ தொடங்கி சரக்கு வரை..! த.வெ.க மாநாட்டில் 18 வகையான தடைகள்! - என்னென்ன தெரியுமா?

TVK Maanadu

நாளை விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு 18 வகையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

நாளை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா என பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள், தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் ரசிகர்களுக்கு 18 வகையான தடைகளை த.வெ.க விதித்துள்ளது. அதன்படி,

 
  • செல்பி ஸ்டிக் பயன்படுத்த தடை
  • ப்ளாஷ் போட்டோகிராபிக்கு தடை
  • சைக்கிள், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை
  • விலங்குகள், செல்ல பிராணிகளுக்கு அனுமதி இல்லை
  • ஆபத்தான பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை
  • துப்பாக்கிகள், தோட்டக்கள் எடுத்துவர தடை
  • மது அனுமதியில்லை
  • ரிமோட் கட்டுப்பாடு சாதனங்கள், ட்ரோன்கள் அனுமதி இல்லை
  • ப்ளகார்டுகளுக்கு அனுமதியில்லை
  • சட்டவிரோத பொருட்கள் அனுமதியில்லை
  • லேசர் சாதனங்களுக்கு அனுமதியில்லை
  • வெடிக்கக்கூடிய பொருட்களுக்கு தடை
  • வீடியோ எடுப்பதற்கு தடை
  • ஸ்கேட்போர்ட், ஸ்கூட்டர்களுக்கு அனுமதி இல்லை
  • கண்ணாடி பொருட்களுக்கு அனுமதி இல்லை.
  • கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுக்கு தடை
  • பிற கட்சியின் கொடிகள், ப்ளகார்டுகளுக்கு அனுமதியில்லை.
 

Edit by Prasanth.K