திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (13:43 IST)

விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் பிரபலங்கள் யார் யார்? கசியும் ரகசியங்கள்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக அரசியலில் விஜய்யின் தமிழகம் வெற்றி கழகம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவர் தமிழன்னை உள்பட முன்னோர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டுக்கள் நடுநிலை வாக்காளர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
 
இந்த நிலையில், விஜய் அரசியல் கட்சியில் சில பிரபலங்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது; நாளைய மாநாட்டில் அந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 குறிப்பாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விஜய் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசியல் நபர்களான செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத், வக்கீல் கே எஸ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் இணைய வாய்ப்பு உள்ளது.
 
அது மட்டுமின்றி, திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சில தலைவர்களும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யாரென்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran