வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (13:02 IST)

இப்படி பண்ணுனா எப்படி வேலை பாக்குறது..? கோச்சுக்காதீங்க..! - செய்தியாளர்களிடம் கெஞ்சிய புஸ்ஸி என்.ஆனந்த்!

BUSSY ANAND

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு குறித்த கேள்விகளுக்கு அதன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பதில் அளித்துக் கொண்டிருந்தபோதே கார் கிளம்பியதால் அவர் கோபமடைந்தார்.

 

 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநாட்டிற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் வேகவேகமாய் நடந்து வருகிறது. ஆனால் மாநாடு ஏற்பாடுகள் நடைபெறும் பகுதிக்கு செல்ல பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

மாநாடு ஏற்பாடு குறித்தான சரியான விளக்கங்களும் பத்திரிக்கைகளுக்கு வழங்கப்படாத நிலையில், இன்று மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டுவிட்டு சென்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்தை நிருபர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர்.
 

 

அப்போது அவர் “மாநாட்டிற்கான அனைத்து பணிகளும் சரியாக நடந்து வருகிறது. இப்படி நீங்கள் மறித்து மறித்து கேள்வி கேட்டால் நாங்கள் எப்படி வேலை பார்ப்பது?” என்று பேசினார். அப்படியென்றால் இனிமேல் எங்களை அழைக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் கோபித்து கொள்ள, அவர்களை என்.ஆனந்த் சமாதானம் செய்ய முயன்றபோது டிரைவர் காரை நகர்த்தினார்.

 

இதனால் கடுப்பான என்.ஆனந்த் டிரைவரை ஆத்திரமாக திட்டினார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்த என்.ஆனந்த், காவல்துறை அறிவுறுத்தியபடி மாநாடு பந்தலில் சிசிடிவி கேமராக்கள், தண்ணீர் கேன்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஏற்பாடுகளையும் காண்ட்ராக்ட் அடிப்படையில் தனியார் நிறுவனம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் புறப்படும்போது, கோபித்துக் கொள்ளாதீர்கள் என அவர்களிடம் வேண்டிக் கொண்டார்.

 

Edit by Prasanth.K