குஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல்… தமிழர்கள் அதிர்ச்சி!
குஜராத்தில் இயங்கி வந்த தமிழ் மேனிலைப் பள்ளி மூடப்பட்டுள்ளது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள மணி நகரில் தமிழ் மேனிலைப் பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த பள்ளி அம்மாநில அரசின் உதவியோடு 1971ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக் காரணமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது அம்மாநில கல்வித்துறை.
இது குஜராத் வாழ் தமிழ் மக்கள் மற்றும் தமிழக மக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.