1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:13 IST)

சென்னையில் 5ம் தேதி முதல் புறநகர் ரயில்சேவை: ஆனால் ஒரு நிபந்தனை

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான ஊரடங்கு உத்தரவு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை தெரிந்துவிட்டது
 
இருப்பினும் சென்னையில் புறநகர் ரயில்சேவை தொடங்காமல் இருந்ததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தது. இந்த நிலையில் சென்னையில் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை துவங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த ரயில்சேவை அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டுமே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மருத்துவம், மின்சாரம், பால் வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் இருப்பவர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்யலாம்
 
மேலும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க எல்லாம் என்றும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காரணம் பயணத்தின்போது காண்பிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தமிழக அரசில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்காகவும் இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அனைத்து தரப்பினருக்கும் இந்த சேவை இல்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது