1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 டிசம்பர் 2025 (09:27 IST)

25 தொகுதிகள் தான்.. காங்கிரசுக்கு கறாராக சொன்னதா திமுக.. தவெக கூட்டணிக்கு செல்லுமா?

25 தொகுதிகள் தான்.. காங்கிரசுக்கு கறாராக சொன்னதா திமுக.. தவெக கூட்டணிக்கு செல்லுமா?
திமுக-காங்கிரஸ் இடையிலான 20 ஆண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக தரப்பில் காங்கிரஸிற்கு வெறும் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2021 தேர்தலை போன்ற ஒரு நிலையையே மீண்டும் உருவாக்குவதால், காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் 'ஆட்சியில் பங்கு' வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திமுக தலைமை இதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 'ஆட்சியில் பங்கு' என்ற வாக்குறுதியை அளித்துள்ளது காங்கிரஸை ஈர்க்கும் முக்கிய காரணியாக உள்ளது. கிரிஷ் சோடங்கருக்கு கட்சியின் ஒரு பிரிவினர் எழுதியுள்ள கடிதத்தில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
இருப்பினும், டெல்லி மேலிடம் ராகுல் காந்தி - ஸ்டாலின் இடையிலான உறவை சிதைக்க விரும்பவில்லை. பிப்ரவரி 17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே, இந்த கூட்டணி மாற்றங்கள் குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva