செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2024 (11:45 IST)

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Heat
காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கும் கடும் வெயில் வீசக்கூடும் என அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.



உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை பெருமளவில் மாறி வருவதுடன், தட்பவெட்ப நிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் மக்கள் அவதிக்குள்ளாக தொடங்கியுள்ளனர். காடுகளை அழித்தல், நகர மயமாக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த பருவநிலை மாற்றம் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தொடர் நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் தமிழக நகரங்கள் உட்பட மொத்தம் 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளில் வெப்பநிலை தற்போது உள்ளதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய வெப்பநிலையே தாங்க முடியாத வண்ணம் உள்ள நிலையில் எதிர்காலத்தில் மக்கள் பலரும் சூரிய வெப்ப அலையால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.


எதிர்காலங்களில் தமிழக வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெப்பம் பதிவாகும் என்றும், தூத்துக்குடி, திருநெல்வெலி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை இரண்டு மடங்காக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதனால் வருடத்தில் 8 மாதங்கள் வரை கடுமையான வெயிலையும், மீத காலங்களில் அதிகமான மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K