1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. happy street celebration in Chennai again

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

Happy
கடந்த சில மாதங்களாக ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி கொண்டாட்டம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்பட சில நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பக்கம் பொதுமக்கள் வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் இன்று 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி துவங்கியது. அண்ணாநகர் பகுதியில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்ட காட்சிகளை இன்று பார்க்க முடிந்தது.
 
'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியால் சென்னை அண்ணாநகரில் 2வது நிழல்சாலை பகுதியில் காலை 9 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. மேலும் அடுத்த ஒரு மாத காலத்துக்கு ஞாயிறுதோறும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!