திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (17:24 IST)

#BanFriendsOfPolice: டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!

#BanFriendsOfPolice என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
 
சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.
 
அதன்படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு சமுதாய சேவையின் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். 
 
இதில் உள்ளவர்கள் சாதாரண உள்ளூர் இளைஞர்கள் ஆவர். மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட பணிகளில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் உதவியுடன் காவல்துறை செயல்படுகிறது.
 
சாத்தான்குளம் கொலை வழக்கில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. #BanFriendsOfPolice என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.