புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (14:26 IST)

”யார் பெரிய ரவுடி?” என்ற தகராறில் நண்பனை கொன்ற வாலிபர்கள்

சென்னையில் தன்னுள் யார் பெரிய ரவுடி என்ற தகராறில் தனது நண்பனை, சக நண்பர்கள் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஆண்டு போலீஸ்காரர் ஒருவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்தவர். இவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில், ரஞ்சித் சென்னை நெற்குன்றம் பகுதியில், தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரனை நடத்தியதில் கொலை குறித்த உண்மை தெரியவந்தது.

சம்பவ தினத்தன்று ரஞ்சித் உள்ளிட்ட 7 பேர் மது அருந்திகொண்டிருந்த போது, போதையில் ரஞ்சித், தான் போலீஸையே கொலை செய்தவன், நான் தான் பெரிய ரவுடி, உங்களால் என்னை போல் ரவுடியாக முடியாது என்று கூறியுள்ளார். இதனால் யார் பெரிய ரவுடி? என்பதில் அவர்களுக்குள்ளே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் மிகவும் கோபமடைந்த ரஞ்சித்தின் நண்பர்கள், ரஞ்சித்தை சரமாரியாக தாக்கி, பாட்டிலால் குத்தி, கல்லை தலையில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையை செய்த ரஞ்சித்தின் நண்பர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், ஜோசப் மற்றும் ஆனஸ்ட்ராஜ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.