தொடர்புடைய செய்திகள்
- சேப்பாக்கம் அணி அதிர்ச்சி தோல்வி: மதுரையிடம் வீழ்ந்தது!
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி - 20 : வெல்லுமா இந்தியா ?
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி !
- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 பேர் போட்டி !
- என்ன தம்பி உப்புத்தாள் வேணுமா? – வார்னரை கலாய்த்த பார்வையாளர்கள்
”கும்பலாக சுத்துவோம், நாங்க அய்யோ அம்மா ன்னு கத்துவோம்”… ஹர்பஜன் சிங்கின் நண்பர்கள் தின டிவிட்டர் பதிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, தனது டிவிட்டர் பதிவில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஸ்டார் வீரரான ஹர்பஜன் சிங் சமீபகாலமாகவே தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே பகிர்ந்து வருகிறார். எந்த ஒரு விசேஷ தினமானாலும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை கூறும் ஹர்பஜன் சிங், இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சமீபத்தில் இளைஞர்களிடம் ட்ரெண்டான “கும்பலாக சுத்துவோம், நாங்க அய்யோ அம்மா ன்னு கத்துவோம்” என்ற பாடலின் வரிகளை பயன்படுத்தியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பதிவை குறித்து பல Meme-களும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன.
நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க.ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான் நட்பும் மச்சானும் துணை
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 4, 2019
Wishing all my dear Friends #HappyFriendshipDay #நண்பர்கள்தினம்
அடுத்த கட்டுரையில்