புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:03 IST)

13 பேர சுட்டுக்கொன்ன, டாஸ்மாக்கை காவல் காக்குற! போலீஸை வறுத்தெடுத்த பொதுஜனம்

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில நேரங்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது 
 
ஹெல்மெட் அணிவது வாகனம் ஓட்டுபவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக தான் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு சிலர் அதனை புரிந்து கொள்ளாமல் தங்களுடைய தவறை நியாயப்படுத்த காவல்துறையினர் கடும் வாக்குவாதம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஹெல்மெட் அணியாத ஒருவரை வழிமறித்த போலீசார் அவரிடம் அபராதம் வசூலிக்க, அதற்கு அவர் போலீசாரிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்கிறார். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது போலீஸ் தான், டாஸ்மாக் கடையை காவல் காப்பது போலீஸ்தான், இதெல்லாம் கண்டுக்காத நீங்கள் இப்போ ஹெல்மட் போடலைனு பிடிக்கிறீர்கள், ஹெல்மெட் போடலைன்னா, நான்தானே செத்துப் போக போகிறேன், செத்து போய் விடுகிறேன்' என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்கிறார் 
 
ஹெல்மெட் அணிவது தங்களுடைய பாதுகாப்புக்குத்தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதும், இவ்வாறான வீண் வாக்குவாதம் இந்த பிரச்சனைக்கு முடிவு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்