வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (09:25 IST)

CSK vs RCB போட்டியை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து டிக்கெட்! – போக்குவரத்துத் துறை அசத்தல் அறிவிப்பு!

Chennai Bus
நாளை தொடங்க உள்ள ஐபிஎல் சீசனின் முதல்போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே வெகு பிரபலமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. நாளை தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே விற்றுத் தீர்ந்தது. கடந்த முறை சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது மைதானத்திற்கு மேட்ச் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானம் வழியாக இயங்கும் பேருந்துகளில் போட்டியை பார்க்க செல்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தொடங்குவது 3 மணி நேரம் முன்பிருந்தும், போட்டி முடிந்த பின் 3 மணி நேரத்திற்கும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு இலவசமாக பயணிக்கலாம். இந்த சலுகை மாநகர போக்குவரத்து குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K