1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (20:11 IST)

சென்னையில் இரண்டே வாரத்தில் 4 மடங்காகிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பில் கிட்டத்தட்ட பாதி சென்னையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் கடந்த மார்ச் 12ஆம் தேதி 265 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று 815 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட நான்கு மடங்கு இரண்டே வாரங்களில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மார்ச் 12 முதல் இன்று வரை சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தற்போது பார்ப்போம்
 
மார்ச் 29: 815
மார்ச் 28: 833
மார்ச் 27: 775
மார்ச் 26: 739
மார்ச் 25: 664
மார்ச் 24: 633
மார்ச் 23: 532
மார்ச் 22: 496
மார்ச் 21: 466
மார்ச் 20: 458
மார்ச் 19: 421
மார்ச் 18: 394
மார்ச் 17: 395
மார்ச் 16: 352
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 12: 265
 
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்னிக்கை 2,47,148 ஆகும்.